பீகார் புகையிரத நிலையத்தில் நக்ஸலைட்டுக்கள் தீவைத்து எரித்து விட்டு 2 புகையிரத நிலைய அதிகாரிகளை கடத்திச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீகார் மசூத புகையிரத நிலையத்தில் நேற்றிரவு நக்ஸலைட்டுக்கள் தீவைத்து எரித்துவிட்டு அங்கு பணியிலிருந்த புகையிரத நிலைய அதிகாரி மற்றும் புகையிரத ஊழியர் ஆகிய இருவரையும் கடத்தி சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும் சம்பவத்தில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நக்ஸலைட்க்கள் மசூத புகையிரத நிலையத்தில் இருந்து புகையிரதங்கள் செல்லக்கூடாது எனவும் புகையிரதங்கள் செல்லாமல் விட்டால் இருவரையும் விடுதலை செய்வதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும் மசூத புகையிரத நிலையத்தில் இருந்து இயங்கும் புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.