உணவு பொதியிடும் லஞ்ச் சீட்ஸ் (lunch sheets), ரெஜிபோர்ம் மற்றும் பொலித்தீன் பைகளை செப்டம்பர் மாதம் முதல் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை, ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில் பொலித்தீன்கள் தொடர்பில் சுற்றுவளைப்பு தேடுதல்களை தீவிரப்படுத்தியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விதிக்கப்பட்ட தடைகளை மீறி பொலித்தீன் உற்பத்தியை மேற்கொண்ட 7 நிறுவனங்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
விதிமுறைகளை மீறி பொலித்தீன் உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனங்கள் தொடர்பிலான சுற்றுவளைப்புகளை கடந்த 4 ஆம் திகதி முதல் முன்னெடுத்து வருவதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர குறிப்பிட்டார்.
உணவு பொதியிடும் லஞ்ச் சீட், பொலித்தீன் பைகள் மற்றும் உணவு பொதியிடும் பெட்டிகளுக்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரசாங்கம் தடை விதித்திருந்தமையை அடுத்து, பொலித்தீன் பாவனை தடை தொடர்பிலான முதலாவது திட்ட அடிப்படையில் சுற்றிவளைப்புகள் மேற்கொண்டு வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.