தலைமை ஆசிரியை மீது தாக்குதல்!!

பெங்களுரில் வட்டி பணம் கொடுக்காததால் பாடசாலைக்குள் நுழைந்து தலைமையாசிரியை மீது தாக்குதல் நடத்தி தலைமறைவான பிரமுகரை பொலிஸார்  தேடிவருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

5a3a3fd9d49fc-IBCTAMILபெங்களுர் சிங்கநாயகனஹள்ளியில் உள்ள தனியார் பாடசாலையில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகின்ற ஆஷா பாடசாலை நிர்வாகத்துக்காக பா.ஜனதா பிரமுகரும்இதொழிலதிபருமான ராமகிருஷ்ணப்பாவிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.70 ஆயிரம் கடன் வாங்கியுள்ளதாகவும்.சமீபத்தில் ஆஷா சரியாக வட்டி பணம் செலுத்தவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,நேற்று முன்தினம் பாடசாலைக்குள் நுழைந்த ராமகிருஷ்ணப்பா,ஆஷாவின் அறைக்கு சென்று அவரிடம் வட்டி பணத்தை கேட்டுள்ளார்.அப்போது,அவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவ்வேளை ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணப்பா தலைமை ஆசிரியையின் கன்னத்தில் அடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,ராமகிருஷ்ணப்பா மீது ஆஷா ராஜனகுன்டே பொலிஸாரில் புகார் செய்துள்ளதால் ராமகிருஷ்ணப்பா தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தேடிவருகின்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.