எனது நோக்கம், இலங்கை அணியை முன்னோக்கி கொண்டுசெல்வதே!!

கடந்த காலங்களை விட்டு, இலங்கை அணியை நான் எவ்வாறு அடுத்த படிக்கு நிலைக்கு கொண்டுசெல்ல முடியுமென்பதிலேயே எனது முழுக்கவனமும் இருக்குமென இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹத்துருசிங்க தெரிவித்தார்.

09col130733417_5709620_22112017_AFF_CMYஇலங்கை கிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பங்களாதேஷ் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தலைமைப் பயிற்றுவிப்பாளராக பதவியேற்பு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு ஹத்துருசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

நான் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்றதையிட்டு மகிழ்ச்சியடைவது மட்டுமல்லாது தாய் நாட்டுக்காக சேவையாற்றுவதை பெருமையாகக் கொள்கின்றேன்.

பங்களாதேஷ் அணிக்கான தொடரே எனது பயிற்றுவிப்பாளர் நியமனத்தின் பின்னர் இடம்பெறும் முதலாவது தொடர், அதில் நான் அந்த அணியின் பயிற்றுவிப்பளாராக இருந்து எதிரணியான இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக இருப்பதில் பல சிக்கல்களை எதிரநோக்கலாம்.

ஏனெனில் எனது பயிற்றுவிப்பு நுணுக்கங்கள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் இதுவொரு நல்ல அனுபவம் எனக்கு, இருப்பினும் நான் வேறு வகையான நுணுக்கங்களையும் திட்டங்களையும் இலங்கை அணிக்கு பயன் படுத்தி வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும்.

நான் பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து முறைப்படி எனது சொந்தக்காரணம் என்று தெரிவித்தே விலகியிருந்தேன்.

இலங்கை அணி வீரர்களைப் பற்றி நான் நன்றாக தற்போதுவரை புரிந்து வைத்திருக்காததால் அவர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட பின்னரே வீரர்களின் திறமைகளை இணங்காண முடியும்.

இதேவேளை, கடந்த காலங்களை விட்டு, இலங்கை அணியை நான் எவ்வாறு அடுத்த படிக்கு கொண்டுசெல்ல முடியுமென்பதிலேயே எனது முழுக் கவனமும் இருக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.