கொழும்பு யாசகர்களின் நிலை…. ஜனவரிக்கு பின்???

1-532-765x510கொழும்பில் யாசகம் பெறுவோர் தொடர்பாக எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதலாம் திகதியின் பின்னர் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக தெரிவித்தார்.

இம் மாத இறுதிக்குள் கொழும்பில் யாசகம் பெறும் அனைவரும் கொழும்பு மாநகர சபையின் நற்காரியங்களுக்கான ஆணையாளரை சந்திக்க வேண்டும் எனவும் அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட யாசகர்கள் அனைவரும் புணருத்தாபன நடவடிக்கைகளுக்காக ஆட்படுத்தப்படுவர் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாசகம் பெறுவோருக்கு வாழ்வாதார பயிற்சிகளை வழங்கி அவர்களையும் சமூகத்தில் சராசரி குடிமகனாக திகழச்செயவதே இச் செயற்திட்டத்தின் நோக்கம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.