நடிகர் அஜித் அனைவரையும் மதித்து அன்பாக பேசக்கூடியவர் என பலரும் சொல்வார்கள். ஷூட்டிங்கில் மட்டுமல்ல பொது நிகழ்ச்சிகளிலும் மற்றவர்களை பார்த்து பேசுவார்.
மற்றவர்களின் திறமையை எப்போதும் பாராட்டி உற்சாகப்படுமாறு பேசுவார். இதற்கு சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த அனுபவமே சான்று. இந்த செய்தி நமது தளத்திலும் பதிவிடப்பட்டது.
தற்போது நடிகை நஸ்ரியா தனக்கு அஜித்திடமிருந்து வந்த பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி என ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் இன்று தன் பிறந்தநாளை கணவருடன் கொண்டாடிய போட்டோ ஒன்றும் வெளியாகியுள்ளது.