கடலுக்கு சென்றவர்கள் இன்றும் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்பதைக் கூட உறுதிப்படுத்த முடியாமல் உள்ளனர் மீனவ மக்கள்.
அழுகுரல் ஓயவும் இல்லை. ஆறுதல் சொல்லித் தேற்ற நாதியுமில்லை என்றே சொல்ல வேண்டும்
ஆறுதல் சொல்ல முதல்வரும், பிரதமரும் வந்தார்களே..?
முதல்வரும், பிரதமரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் வராமல் தேர்தல் பிரச்சாரத்திலேயே குறியாக இருந்துள்ளனர்
ஒக்கி புயலில் 88 பேர் உயிரிழந்துள்ளனர், 500க்கும் மேற்பட்டவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை, இப்படி இருக்க பிரதமர் வந்து எந்த ஆறுதலும் கூறவில்லை..
குறைந்தபட்சம் டுவிட்டரில் கூட போடவில்லை…
.
ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்து சேர்ந்தவர் ஹெலிபேடில் இருந்து நேராக விருந்தினர் மாளிகை சென்று அங்கு முதல்வர் எடப்பாடி உடன் ஆலோசனை நடத்திய பின்,
அங்கு வைக்கப்பட்டிருந்த ஒக்கி புயல் பாதிப்புகள் குறித்த போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்வையிட்டார்.
பின்னர் மீனவர்கள் சிலரை மட்டும் விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து அவர்களிடம் வினாவியுள்ளார், பெயரளவிற்கு அவர்களிடம் நின்றபடியே 10 நிமிடம் பேசிவிட்டு புறப்பட்டார்
ஏற்கனவே சென்னை வர்தா புயல் பாதிப்பு, வறட்சி பாதிப்பு என தமிழகம் தொடர்ந்து இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட இருக்க மத்திய அரசு போதிய நிவாரணம் வழங்கவில்லை.
தற்போது கூட ஒக்கி புயல் பாதிப்பை ஓரளவு ஈடு செய்ய மத்திய அரசு ரூ. 9,302 கோடி நிவாரணம் வழங்கவேண்டும் என தமிழக முதல்வர் கேட்டு கொண்டு இருந்தார், ஆனால் மத்திய அரசு ரூ.325 கோடி மட்டுமே ஒதுக்குவதாக அறிவித்திருக்கிறது.