வெளிநாடொன்றில் முதியோர் இல்லத்தில் பணியாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சைபிரஸ் நாட்டின் Limassol பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் 70 வயதுடைய நபரின் மரணம் தொடர்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை தூக்குவதற்கு முயற்சித்த பெண்ணால், அந்த நபரின் சட்டை காலரை பிடிக்கும் போது கழுத்து நெரிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய அனுமதிப் பத்திரம் இல்லாம் இரவு நேரப் பணி செய்த 27 வயதான இலங்கை பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இல்லத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்களிலிருந்த காட்சிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த கமராவில் இருந்த காட்சிகளுக்கமைய வயோதிபரை படுக்கையில் இருந்து இழுக்கும் போது கழுத்து நெரிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் குறித்த இலங்கை பெண் அவரை பார்த்து கொள்ளச் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் அவர் உயிரிழந்த விடயம் குறித்து அலட்சியமாக இருந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரேத பரிசோதனைக்கமைய குறித்த நபரின் கழுத்துப் பகுதியில் கடுமையான காயங்கள் காணப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.