குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட பருப்பை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் தமிழக அரசு கண்டித்து மக்கள் எந்த வித எதிர்ப்பையும் காட்டாதது ஆச்சர்யமளிக்கிறது.
மைசூர் பருப்பில் டி-அமினோ-ப்ரோ-பியோனிக் ஆசிட் உள்ளது. இதனைத் தொடர்ந்து உணவில் பயன்படுத்தினால் கால் மூட்டுக்கள் மற்றும் தண்டுவடம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுகளை இழந்து பக்கவாதத்தை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டு, தேசிய அளவில் தடை செய்ய இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரைத்தது.
சமீப காலமாக ரேசனில் மசூர் பருப்பு தான் வழங்குகிறா்கள். இந்ந பருப்பால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி 10 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த இரண்டு மாதமாக ரேசன் கடைகளில் நியோகிக்கிறார்கள். இப்போது உளுத்தம் பருப்பையும் தடை செய்துள்ளார்கள்.
துவரம் பருப்பு அதிக விலையாக இருந்தபோதும், தமிழகத்தில் வெகு சிலரே மைசூர் பருப்பைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு காலத்தில் மதிய உணவுத் திட்டத்தில் மைசூர் பருப்பே பயன்படுத்தப்பட்டது. இதனால், உடலுக்கு ஏற்படும் தீங்கை முன்னிறுத்தி, 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சத்துணவில் பயன்படுத்தத் தடை கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நியாய விலை கடைகளில் மைசூர் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.
குறைந்த விலையில் பரவலாக அப்பருப்பு மக்கள் மத்தியில் விற்கப்பட்டது. பார்க்கிறதுக்கு ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் இந்தப் பருப்பு, வெந்ததும் மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடும்.
துவரம் பருப்பில் செய்யும் உணவில் இருக்கும் டேஸ்ட் மைசூர் பருப்பில் இருக்காது. துவரம் பருப்பில் புரோட்டீன் அதிகம் இருக்கும். எனவே மைசூர் பருப்பு எந்தவிதத்திலும் உடலுக்கு நல்லதில்லை