சவுதியில் ஏவுகணைத் தாக்குதல்! அச்சத்தில் இலங்கையர்கள்!

201712191724551813_Yemen-rebels-say-fired-missile-at-Riyadh-palace_SECVPFசவுதி அரேபியாவின் ரியாத் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதல் தவிர்க்கப்பட்ட போதிலும், அங்கு வாழும் இலங்கையர்கள் அச்சத்துடன் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம் 4ஆம் திகதி மற்றும் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதல் வானிலேயே செயழிலக்க செய்வதற்கு சவுதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எனினும் தொடர்ந்தும் சவுதி மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாதென இராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. வானில் பாரிய சத்தம் ஒன்று கேட்டதாகவும் ரியாத் நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, 2016ஆம் ஆண்டின் உத்தியோகபூர்வ அறிக்கைக்கமைய 190,000 இலங்கையர்கள் சவுதி அரேபியாவில் பணிக்காக சென்றுள்ளனர்.

இந்த நிலைமையினுள் இந்த அனைத்து இலங்கையர்களின் உயிர் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு சவுதி அதிகாரிகள் மற்றும் இலங்கை அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது அங்கு வாழும் இலங்கையர்களின் கருத்தாகும்.