ஆடுகளை ஏற்றிச்சென்றவா் கைது!

அனுமதி பத்திரம் இன்றி 30 ஆடுகளை பாரவூர்தி ஒன்றில் ஏற்றிச்சென்ற நபர் ஒருவர் அச்சுவேலி மீசாலை வீதியில் வைத்து அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

5a3b4a83a68db-IBCTAMILஇந்த கைது சம்பவம் இன்று(21) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக அச்சுவேலி பொலிஸாரால் தெரிவித்தனா்.

இன்று(19) அதிகாலை 05 மணிக்கு அச்சுவேலியில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற பாரவூர்தி ஒன்றை மீசாலை வீதியில் இடைமறித்து பொலிஸாா் சோதனை செய்த போது சட்டவிரோதமாக 30 ஆடுகளை அனுமதிப்பத்திரம் இன்றி ஏற்றி சென்றமை தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து உடனடியாக சாரதியை கைது செய்ததுடன், ஆடுகளையும் மீட்டதாக அச்சுவேலி பொலிஸாா் தெரிவித்தனா். இதன்போது 36 வயதுடைய நபா் சந்தேகசத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.

இந்த சம்பவம் தொடா்பில் அச்சுவேலி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.