நாட்டு வைத்தியத்தால் இருதய நோயை குணப்படுத்த.!

சிலருக்கு இருதய வலி, இருதய படபடப்பு, மூச்சு திணறல் போன்றவற்றை இருக்கும். இந்த மாதிரியான நோய்யில் இருந்து நாட்டு வைத்தியம் கொண்டு விலக இந்த குறிப்புகளை பயன் படுத்தலாம். வெள்ளரிப் பிஞ்சுகள் கிடைக்கும் காலங்களில் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால் இதய நோய் குறையும்.

இதய பலவீனம்

அத்திப்பழங்களை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காயவைத்து கல்லுரலில் போட்டு இடித்து வஸ்த்திரகாயம் (துணியில் சலித்தல்) செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும்.

இருதய நோய்யை நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த குறிப்புக்கள்.!

இதய படபடப்பு மற்றும் மூச்சு திணறல்

திராட்சைப் பழங்களை வெந்நீரில் ஊறவைத்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு துளசி சாற்றை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இதயத்தில் ஏற்படும் படபடப்பு குறையும். பூண்டை நன்கு சுட்டு தோலை உரித்து சாப்பிட் வேண்டும். சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் படபடப்பு குறையும்.

மார்பு வலி

கருந்துளசி இலை, செம்பருத்தி பூ ஆகியவற்றை எடுத்த நன்கு சுத்தம் செய்து பின்பு அதை கஷாயம் செய்து 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.