நான்கு மாத பச்சிளம் குழந்தையின் உயிரைப் பறித்த தாய்ப்பால்
பசறை பகுதியில் 4 மாத பச்சிளம் குழந்தை ஒன்று தாய்ப்பால் அருந்திய பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் தொண்டையில் பால் அடைத்ததன் காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பசறை வைத்தியசாலையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனளிக்காததால் உயிரிழந்துள்ளதாகவும், குழந்தையின் சடலம் தற்போது பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.