முகில் கூட்டங்கள் நிறைந்து காணப்படும் வானம் – தாழமுக்கமே காரணம்!

நாட்டில், வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று(21.12.2017) தெரிவித்திருந்தது.

நாடுமுழுவதும் முகில் கூட்டங்கள் நிறைந்து காணப்படும் வானம் -   தாழமுக்கமே காரணம்!

இந்நிலையில், நாட்டுக்கு அருகாமையில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக நாடுமுழுவதிலும் வானம் முகில் கூட்டங்கள் நிறைந்ததாக காணப்படுவதாகவும், அத்துடன் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கமுடியும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தற்போது தெரிவித்துள்ளது.

மேலும் வளிமண்டலவியல் திணைக்களமானது,

  • வடக்கு வடமத்திய கிழக்கு தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை பெய்யும் .
  • மழை அல்லது இடியுடன் கூடிய மழை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் பெய்யக்கூடும்.
  • கிழக்கு சப்ரகமுவ தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் 75 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி இடம்பெறும்.
  • வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மொனறாகலை மாத்தறை மாவட்டங்களிலும் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசும்.
  • இடியுடன்கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

எனத் தெரிவித்துள்ளதோடு,  இடிமின்னிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.