கோலிவுட் சினிமாவின் தற்போதைய காமெடி நடிகர் என்றால் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் சந்தானம். இவர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர். இவர் பல காமெடிகள் எப்போது பார்த்தலும் சிரிப்பு கொட்டும். மேலும், அணைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்தது கலக்கியவர் இவர். இவருக்கு ஹீரோ ஆசை வந்தால் எப்படி இருக்கும். நகைச்சுவை நடிகராக இருந்தாலே படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது அந்த வகையில் ஹீரோவாக நடித்தால் படம் முழுவதும் நகைச்சுவை தான். மேலும், இவரின் நடிப்பில் முன்பு வெளியான படங்களும் மிக பெரிய ஹிட் கொடுத்தது.
தற்போது இவர் நடித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா. இப்படத்தின் இசையமைப்பாளர் நடிகர் சிம்பு. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. எப்போதும் இவர் குடும்பத்தை பற்றி திரையுலகில் பேசியதே இல்லை. என் குடும்பம் வேறு, திரை வாழ்க்கை வேறு என்று அவர் தெளிவாக கூறிவிட்டு ஒதுங்குபவர்.
அந்த வகையில் தன் மனைவி, மகன் என யாரையும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைத்து வராத சந்தானம் முதன் முறையாக தன் மகனை பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார். இதுக்குறித்து சந்தானம் கூறியதாவது: “ஆம், அன்று அவனை வரியா என்று தான் கேட்டேன், உடனே கோட் எல்லாம் போட்டு கிளம்பிவிட்டான், எனக்கு மேல் அவன் ட்ரெண்ட் ஆகிட்டார். அதை விட சிம்பு உன்னை நான் தான் சினிமாவில் அறிமுகப்படுத்துவேன் என்று கூற, இன்னும் குஷியாகிவிட்டான்” என்று சந்தானம் கூறியுள்ளார்.