வளையல் என்பது இரண்டு கைகளிலும் மணிக்கட்டில் அணியும் ஒரு அணிகலனாகும். பொதுவாக இது, வட்ட வடிவமானது.
திருமணமான பெண்கள், திருமண ஆகாத பெண்கள் என்று அனைவரும் வளையல்கள் அணிந்து கொள்வது பழங்காலத்தில் இருந்து நடை முறையிலிருந்து வரும் பழக்கமாகும். பூர்வ காலங்களில் இருந்து, பல்வேறு உலோகங்களிலிருந்து அதாவது செம்பு, வெள்ளி, தங்கம், பிளாஸ்டிக், கண்ணாடி, சங்கு, மெழுகு மற்றும் யானைகளின் தந்தத்தில் கூட வளையல்கள் தயாரிப்பதற்கான ஒரு பாரம்பரியம் இருக்கிறது. பொதுவாக தெற்கு ஆசியா பெண்கள் தான் இதனை முதன் முதலில் அணிய தொடங்கினர்.ஆனால் தற்போது மேலைத்தேயப் பெண்களும் வளையல்கள் அணிந்து கொள்வதை நவநாகரிகமாக்கி கருதி அணிந்து வருகின்றனர்.
பெண்கள் வளையல்களை அணிவது கலாசாரம் என மட்டுமே நோக்கும் பலருக்கு அதன் பின்னால் மறைந்துள்ள அறிவியற் காரணிகள் புரிவதில்லை.
- வளையல்களின் தொடர்ந்த உராய்வினால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
- கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல்களின் ஒலி, சந்தோஷத்தை கொடுத்து மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கேட்கும் திறனையும் அதிகரிக்கின்றது.
- கண்ணாடி வளையல்கள் ஒலிகள் மென்மையானதாக இருப்பதால் அது அணிபவர்களின் மனநிலையை மேம்படுத்துகிறது.
- வளையல்கள் வளிமண்டலத்தில் இருந்து நன்மை மற்றும் தூய்மைகளை உறிஞ்சி இயற்கையான சூழல்களில் நிலவும் சக்திகளை அதை அணிபவருக்கு கொடுக்கிறது.
- வளையல்கள் ஒலிகள் மென்மையானதாக இருப்பதால் அது அணிபவர்களுக்கு மட்டும் அல்லாமல் உடனிருப்பவர்களின் மனநிலையையும் மேம்படுத்துகிறது. அந்த இடமே சண்டை சச்சரவின்றி அமைதியாக மாறுகிறது.
- வளையல்கள் எதிர்மறை சக்திகளை புறக்கணித்து வளி மண்டலத்தில் இருக்கும் தீவினைகளில் இருந்து அணிபவரின் உடலை பாதுகாக்கிறது.
தற்போது கைப்பட்டி போன்ற நவீன அணிகலன்கள் வந்துவிட்டதால், வளையல்களை பெண்கள் முற்றிலுமாக மறந்துவிட்டனர் என்றே கூறலாம்.