மர்ம புதைகுழியில் சடலங்கள்! இராணுவம் பேஸ்புக்கில் பதிவு…

மியான்மரில் புதைகுழியிலிருந்து 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

மியான்மரின் ரோஹிங்கயா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ராக்கைன் மாகாணத்தில் உள்ள புதைகுழியலில் 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டு இராணுவம் தனது பேஸ்புக் பக்கத்தில், ராக்கைன் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இண் டிண் கிராமத்தில் உள்ள புதைகுழியிலிருந்து 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அந்த புதைகுழியின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கயா பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இராணுவம் நடத்திய தாக்குதலில், 6,700 மக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.