நாட்டில் அடுத்த ஆண்டு, பெப்ரவரியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முதலாம் கட்டப் பணிகள், கடந்த வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவு பெற்றது.இதன் இரண்டாம் கட்டப் பணிகள் கடந்த திங்கட்கிழமை(18.12.2017) ஆரம்பமாகி, இன்று நிறைவுபெறவுள்ளது.
இந்நிலையில், நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக, நாளை(22.12.2017) வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை உரிய தினத்தன்றோ அல்லது அதற்கு முன்னரோ தேர்தல் அலுவலகத்திற்குக் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வைத்தல் அவசியமாகும்.
தேர்தல் காலத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக, 15 ஆயிரம் பொலிஸார் பணியில் ஈடுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, பொலித்தீன் பாவனைக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.