23..5 வீதத்தால் அதிகரிப்பு இந்தியாவில் செல்வந்தர் தொகை!

இந்தியாவில் தனிநபர் ஈட்டும் வருமானத்தின் அடிப்படையில் செல்வந்தர்கள் குறித்த புள்ளி விவரங்களை வருமானவரி இலாகா நேற்றைய தினம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

13992630363D-India-Flag-Map-2அதன்படி நாட்டில் 59ஆயிரத்து830 செல்வந்தர்கள் ஒரு கோடி ரூபாவிற்கு மேல் வருமானம் சம்பாதிப்பவர்களாக உள்ளனர். இது முன்னய ஆண்டை விட 23.5 சதவீதம் அதிகம் எனவும் இவர்களது மொத்த வருமானம் ரூ.1.54 லட்சம் கோடி எனவும் தெரியவந்துள்ளது.

இதில் 55ஆயிரத்து331 தனிநபர்கள் ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடி வரை வருமானம் ஈட்டியதாகவும்,ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை 3ஆயிரத்து020 பேரும்,ரூ.10 கோடியில் இருந்து ரூ.25 கோடி வரை 1ஆயிரத்து156 பேரும் சம்பாதித்தாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டு ஆண்டில் ஒரேயொருவர் மட்டும் ரூ.500 கோடிக்கு மேல் வருமான கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வருமானம் ரூ.721 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் 120 கோடி மக்களில் வெறும் 4.07 கோடி பேர் மட்டுமே வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருப்பதாகவும் இவர்களிலும் 82 லட்சம் பேர் ரூ.2.5 லட்சத்துக்கு கீழே வருமானம் ஈட்டியதாகவும் வருமான வரி இலாகாவின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.