இலங்கையை நேரம் பார்த்து பழிதீர்த்த ரஷ்யா?

இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தடை விதித்துள்ள நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Captureiy7iyiy (1)இதன்படி, ரஷ்யாவில் இருந்து எஸ்பெஸ்டஸ் தகடுகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தடை வித்துள்ள நிலையில், அதற்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாக தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா தடை விதித்திருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் நவீன் திஸாநாயக்க இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “குறித்த இரண்டு விடயங்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யா நாட்டு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், தேயிலை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆராய்வதற்கு எதிர்வரும் 25ஆம் திகதி நிபுணர்கள் குழுவுடன் ரஷ்யா செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எஸ்பெஸ்டஸ் தகடுகளை இறக்குமதி செய்வதற்கான தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இந்நிலையிலேயே, இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தடை விதித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கைக்கு எஸ்பெஸ்டஸ் தகடுகளை இறக்குமதி செய்வதில் ரஷ்யா முதலிடத்திலிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.