இலங்கை செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து ஒன்லைன் வீசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நாளாந்தம் சுமார் 15 ஆயிரம் பேர் குடிவரவு குடியகல்வு விடயங்களுடன் தொடர்புபடுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் அந்த பணிகளை திறம்பட செய்யும் வகையில் விருத்தி செய்யப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என். ரணசிங்க தெரிவித்தார்.
இந்த பணிகளை விரிவுபடுத்துவதற்காக கூடுதலான அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கும் பயணிகளின் வசதி கருதி தேவையான குடிவரவு குடியகல்வு வசதிகளை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கான ஒழுங்குகள் தற்பொழுது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு பிரிவு செயற்பட்டு வருவதாக கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே விசா அனுமதியினை வழங்குவதற்காக, அதாவது இணையத்தள விசா (Online Visa) வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.