தல அஜித்குமார் என்றாலே இன்றைய இளைஞர் பட்டாளத்தில் ஒரு தனி மரியாதை இருக்கிறது என்றே கூறலாம்.
அவ்வளவு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருப்பவர்.
இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டி தற்போது வைரலாகியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில், நடிகர் சந்தானம் கேள்வி கேட்க அஜித் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, அஜித்திடம், நீங்கள் எந்த நடிகையுடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்டார் சந்தானம்.
அதற்கு, அஜித் அமர்களம் படத்தில் நடிக்க எனது தயாரிப்பாளர் ஷாலினியை கேட்டுள்ளார். ஆனால், அவர் நான் படிக்க வேண்டும் முடியாது எனக் கூறிவிட்டார். பின்பு, அவரை நடிக்குமாறு நான் தான் மிகவும் கட்டாயப்படுத்தினேன் எனக் கூறினார்.
மேலும், ஷாலினியை நீங்கள் முதலில் எப்பொழுது காதலிக்க ஆரம்பித்தீர்கள் என ஒரு இளம்பெண் கேள்வி கேட்க, அதற்கு அமர்களம் படத்தில், ஒரு காதல் காட்சியில் ஷாலினி உண்மையாகவே கையை அறுத்துக் கொண்டார். எனக்கு தெரிந்து நான் அந்த நொடியே அவரை காதலிக்க ஆரம்பித்து விட்டேன் எனக் கூறியுள்ளார்.