பொது வெளியில் பெண்ணின் ஆடைகளை கிழித்த நபர்கள்!!

பொது வெளியில் பெண்ணின் ஆடைகளை கிழித்த 7 நபர்கள்: வெடித்த சர்ச்சை

ஆந்திராவில் நிலம் தொடர்பான ஒரு வாக்குவாதத்தில் பெண் ஒருவர் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு, அவருடைய ஆடைகள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினம் மாவட்டத்தில், நிலத்தில் குழி தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறிய அப்பெண், ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினரால் தான் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்பெண் புகார் அளித்தும் பொலிசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அந்தப் பெண்ணைத் தாக்கிய 7 பேர் மீது, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகையில், அந்த ஊரில், சர்வே எண் 77 என்று குறிப்பிடப்பட்ட நிலத்தில் பட்டியல் சமூக மக்கள் வேளாண் தொழில் செய்துவருகின்றனர். அந்த நிலம், அவர்களுக்கு அரசினால் ஒதுக்கப்பட்ட நிலமாகும்.

ஆனால், திடீரென தெலுங்கு தேசம் கட்சியினர் அப்பகுதிக்கு ஜே.சி.பி வாகனத்தோடு வந்தனர். முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் அங்கு பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி அழித்தனர்.

இதை எதிர்த்து அங்கிருந்த பட்டியல் சமூக மக்கள் குரல்கொடுத்ததால், அவர்கள் அந்தப் பெண்ணைத் தாக்கி, அவருடைய ஆடைகளைக் கிழித்தெறிந்தனர் என்று கூறியுள்ளார்கள்.