இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமண நிகழ்வு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
இருவருக்கும் இடையிலான காதல் இலங்கையில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோஹ்லி மற்றும் அனுஷ்காவை இணைத்து வைக்கும் முதல் நபராக இலங்கையர் ஒருவர் செயற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மஹரகமவை சேர்ந்த மெல்கம் மந்தாரா என்ற இலங்கையர்களே காதல் கதையின் ஆரம்ப நபராக செயற்பட்டுள்ளார்.
இலங்கையின் திறமையான தயாரிப்பு முகாமையாளராக மெல்கம் மந்தாரா செயற்பட்டுள்ளார்.
படத் தயாரிப்பின் போது அனுஷ்கா ஷர்மா இலங்கையில் தங்கியிருந்தார்.
மெல்கம் போம்பே வெல்வட் சினிமா நடவடிக்கையை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் அனுஷ்கா ஷர்மா அவரிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தனது காரில் விமான நிலையத்திற்கு சென்று தனது நண்பர் ஒருவரை அழைத்து வருமாறு குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்திற்கு சென்ற மெல்கம், விராட் கோஹ்லியை அழைத்து வந்துள்ளார்.
அந்த காலக்கட்டத்தில் கோஹ்லி அவ்வளவு பிரபலமானவர் அல்ல. வாகனத்தில் ஏறுமாறு கோஹ்லியை மெல்கம் கூறியுள்ளார். எனினும் கோஹ்லி சாரதி ஆசனத்தில் அமர்ந்து வீடு எங்கு உள்ளது என கேட்டுள்ளார்.
அதற்கமைய மஹரகமவுக்கு சென்ற கோஹ்லி, மெல்கமவை வீட்டில் இறக்கிவிட்டு அனுஷ்காவை சந்திப்பதற்கு சென்றுள்ளார்.
இவ்வாறான சந்திப்பின் மூலம் தான் கோஹலி, அனுஷ்காவின் காதல் கதை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.