இன்று அறிக்கை தாக்கல், சேலை முந்தானையை தூக்கிய விவகாரம்!!

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்காக நீளமான சேலை முந்தானையை ஏந்திநிற்பதற்காக பாடசாலை மாணவிகளை ஈடுபடுத்திய விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் கணக்காய்வாளர் பிரிவுக்கு அறிக்கை ஒன்று சமர்பிக்கப்படவுள்ளது.

5a3c849030337-IBCTAMILமத்திய மாகாண சபையின் கல்விச் செயலாளர் ஆர்.எம்.டி.எவ் ரத்நாயக்கவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய தரப்பினரிடம் இருந்து தகவல் கிடைப்பதற்கு தாமதம் ஏற்பட்ட காரணத்தினால் ஆய்வறிக்கையும் தாமதமாகியதாக ஆர்.எம்.டி.எவ் ரத்நாயக்க தெரிவித்தார்.

திருமண நிகழ்வில் மணப்பெண்ணின் சுமார் மூன்றரை கிலோ மீற்றர் நீளமுடைய சேலை முந்தானையை ஏந்திநிற்பதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி கண்டியிலுள்ள சரத் ஏக்கநாயக்க பாடசாலையைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியில் மாணவிகளின் உரிமையும், கல்வி நேரமும் வீணடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததோடு விசாரணைகளும் நடத்தப்பட்டன.

விசாரணையின் பிரதிபலனாக பாடசாலை மாணவிகளை நடுத்தெருவில் அமர்த்தி சேலை முந்தானையை ஏந்திப்பிடிப்பதற்கு ஈடுபடுத்தியதற்காக அனுமதி வழங்கிய மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு இடமாற்றமும் வழங்கப்பட்டது.

இந்த நிலையிலேயே 2 மாதங்களுக்குப் பின்னர் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் இறுதி ஆய்வறிக்கை இன்று சமர்பிக்கப்படவுள்ளது.