பாரிய தீ விபத்து 29 பேர் உயிரிழப்பு!

தென்கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜெசியோன் நகரத்தில் பிரபல வணிக வளாகமான 8 மாடிகளுடன் முக்கோண வடிவம் கொண்ட கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருக்கும் விளையாட்டு பயிற்சி மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

5a3c8ecc58c25-IBCTAMILஇந்த கட்டிடத்தில் வீடுகள், நீச்சல் குளம், உணவகம் போன்றவை இயங்கி வருகிறது. கண்ணிமைக்கு நேரத்தில் தீ மளமளவென்று மற்றைய பகுதிக்கும் பரவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணியில் சுமார் 500 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

ஆனாலும் தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியதில் 23 பேர் தீயில் சிக்கியும், மூச்சு திணறியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயடைந் 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து பலி எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்தவர்கள் வெளியே தப்பி ஓட முயன்றுள்ளனர். ஆனால் வெளியே செல்ல வழி இல்லாததால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்தில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீயணைப்பு வீரர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

வாகனங்கள் நிறுத்துமிடத்தில் முதலில் தீப்பற்றி கட்டிடத்துக்கு பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தென்கொரியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய தீ விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.