பாரிஸ் நகரை விட்டு வெளியேறும் மக்கள்: காரணம்?

பிரான்சின் பாரிஸில் பிறந்து வாழ்ந்து வந்த மக்கள் அந்நகரை விட்டு வெளியேறி வருவது சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

French national statistics agency Insee கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், பாரிஸ் குடிமக்கள் அந்நகரை விட்டு, தெற்கு பிரான்ஸில் உள்ள Sunny நகருக்கு புலம்பெயருவதாக தெரிவித்துள்ளது.

வீட்டுவசதி செலவுகள், தொழில்முறை காரணங்கள், குழந்தை வளர்ப்பு செலவினங்கள் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளின் காரணமாக பாரிஸ் நகர மக்கள் வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1999 ஆண்டு பாரிஸில் பிறந்த 70 சதவித மக்கள் தற்போது Ile-de-France நகரில் வசித்து வருகின்றனர், கடந்த 2006 ஆண்டு இதன் சதவிதம் 68 ஆக குறைந்தது.

மேலும் தற்போது பாரிஸ் பிறந்த 66 சதவித மக்களே அங்கு வசித்து வருகின்றனர், பிரான்ஸில் உள்ள 3.5 மில்லியன் மக்களில், மூன்றில் ஒரு பகுதியினர் பாரிஸ் நகரை விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்வதற்கு தயாராக உள்ளனர்.

இவ்வாறு வெளியேறும் மக்களின் விருப்ப இடமாக பிரான்ஸின் தெற்கு பகுதியில் உள்ள Sunny நகரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.