காஞ்சிபுரத்தில் நான்கு பேரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தாமோதரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன். இவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, தாய் சரஸ்வதி, மனைவி தீபா, குழந்தைகள் ரோசன், மீனாட்சி என நான்கு பேரையும் கொன்று விட்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கழுத்தை அறுத்து கொண்டார். இதனையடுத்து தாமோதரனை மீட்ட காவல்துறையினர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தாமோதரன் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை சரியான நிலையில், தாமோதரனை நேற்று பல்லாவரம் உதவி ஆணையாளர் தேவராஜ் தலைமையில் போலீசார் கைது செய்தனர். மேலும் இன்று தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி காரல் மார்க்ஸ் முன்பு ஆஜர் படுத்தினர். வழக்கினை விசாரித்த நீதிபதி குற்றவாளியை 15 நாள் புழல் சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.