யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் ஆயுதங்களுடன் புகுந்த நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்னர்.
சங்கானை தேவாலய வீதியிலுள்ள வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து 12 பவுண் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கத்தி, வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி அவர்கள் அணிந்திருந்த நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.
வீட்டு உரிமையாளரான ஓய்வு பெற்ற வைத்தியர் செல்வநாயகம் மற்றும் அவரது மருமகனான பிரபாகரன் ஆகியோர் கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர்.
பிரபாகரனின் முழங்கைக்கு கீழே பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதிகாலை 1.30 மணிக்கு சங்கானை மல்லாகம் சந்தியில் கடமையிலிருந்த பொலிஸாரிடம் முறையிட்டும் 100 மீற்றர் தூரமுள்ள களவு நடந்த வீட்டுக்கு அவர்கள் வரவில்லை எனவும் நேற்று மதியம் மானிப்பாய் பொலிஸார் மோப்ப நாயுடன் வருகைதந்து விசாரணை மேற்கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கொள்ளையர்களின் 6 சோடிப் பாதணிகள் மற்றும் பொல்லுகள் என்பன வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.