மனைவிக்கு வேறு ஆணுடன் தொடர்பு: சாமர்த்தியமாக பிடித்த கணவன்

மனைவிக்கு வேறு ஆணுடன் தொடர்பு இருப்பதை அவரின் காரில் கண்காணிப்பு கருவி பொருத்தி கணவன் கண்டுபிடித்த நிலையில் மனைவி இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரித்தானியாவின் ஸ்டாக்டான் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, ஆண்ட்ரூ ஹண்டர் (41) என்பவருக்கும் ஒரு பெண்ணுக்கும் கடந்த 2012-ல் திருமணம் நடந்தது.

ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த தம்பதியின் மணவாழ்க்கையில் பின்னர் பிரச்சனை ஏற்பட்டது.

ஆண்ட்ருவுக்கு திடீரென கடன்கள் அதிகமானதால் மனைவியுடன் தொடர்ந்து சண்டை போட்டதுடன், அவரை புறக்கணித்து வந்துள்ளார்.

இதனால் வெறுப்படைந்த அவரின் மனைவி ஆண் நண்பர் தனக்கு தேவை என டேட்டிங் இணையதளம் மூலம் தேடியுள்ளார்.

 

பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் இணையதளம் மூலம் ஒருவரின் தொடர்பு ஆண்ட்ரூ மனைவிக்கு ஏற்பட இருவரும் போன் நம்பரை பறிமாற்றி கொண்டார்கள்.

அடிக்கடி அவரை சந்திக்கும் ஆண்ட்ரு மனைவி போனிலும் பேசி வந்துள்ளார், மனைவி நடத்தையின் மீது சந்தேகப்பட்ட ஆண்ட்ரு அது குறித்து அறிய கண்காணிப்பு கருவி ஒன்றை இணையத்தில் வாங்கி மனைவி காரில் பொருத்தியுள்ளார்.

அதன் மூலம் மனைவிக்கு வேறு ஆணுடன் தொடர்பு இருப்பதை ஆண்ட்ரூ உறுதி செய்துகொண்டார்.

இதை எப்படியோ அறிந்த மனைவி கணவன் மீது தன்னை சட்டவிரோதமாக கண்காணிப்பதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆண்ட்ரூ தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார், இதையடுத்து ஆண்ட்ரூ கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு அடுத்தாண்டு பிப்ரவரி 27-ம் திகதி வரை பெயில் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆண்ட்ரூவிடம் சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்படவுள்ளது.