வெளிநாட்டவர்களும் ஒரு காரணம்! இலங்கை நாணயப் பெறுமதியில் மாற்றம்!!

இலங்கை நாணயப் பெறுமதியான ரூபாவின் பெறுமதி தற்பொழுது அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் நாணய மாற்றுவீத புதிய அறிக்கை கூறுகின்றது. கடந்த சில வாரங்களில் சடுதியான வீழ்ச்சியினைச் சந்தித்திருந்த நிலையிலேயே இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

sri_lanka_paper_money_10-1000_rupeesஇதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 151 ரூபாவாக பதிவாகியுள்ளதோடு விற்பனைப் பெறுமதி 154.79 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 178.21 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வெளி நாடுகளிலுள்ள இலங்கையர்கள் அதிகளவில் உள் நாட்டில் பணப்பரிமாற்றம் மேற்கொண்டமை, இறக்குமதியாளர்களின் டொலர் தேவை அதிகரித்தமை மற்றும் ஏற்றுமதியாளர்கள் டொலர்களை விற்பனை செய்தமை என்பவற்றின் காரணமாக இந்த நாணயப் பெறுமதி அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலரிடன் ஒப்பிடும்போது, இந்த வருடத்தில் நூற்றுக்கு 2.2 வீதம் ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.