முதல் படத்திலேயே கலக்கிய அனிருத்.!

இளைமையான இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் அனிரூத் பல சர்ச்சைகளில் சிக்கி இன்றும் முன்னணி பாடகராக திகழ்பவர் இவர். இப்படி ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார் என்பது தனுஷ் படம் மூலம் தான் தெரியவந்தது. அனிரூத் மற்றும் தனுஷ் இணைத்து பணியாற்றிய படம் தான் 3, இந்த படத்தில் வரும் ‘கொலைவெறி’ பாடல் மிக பெரிய ஹிட் அடித்தது. அந்த பாடலால் அனிருத் முன்னணி இசையமைப்பாளராகிவிட்டார்.

05-1475661457-anirudh-6001இந்த நிலையில், தற்போது அவர் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்துள்ள 25-வது படமான அஞ்ஞானவாசி படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருக்கு தெலுங்கில் இது தான் முதல் படம். இந்த படத்தில் அனிருத் இசையில் உருவான பாடல்கள் வெளியாகி விட்டன.

தெலுங்கு சினிமாவில் முதல் படத்திலேயே கலக்கிய அனிருத்.!

இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார் அனிருத். இந்த படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தில் இசையமைக்க கமிட்டாகியுள்ளார் அனிருத்.