வயிற்று வலியை குணப்படுத்த கொடூர சடங்கு – சிறுமி பலி

மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுமியின் வயிற்று வலியை குணப்படுத்துவதற்காக, கொடூரமான முறையில் பூஜை செய்து கொன்ற தாய் மற்றும் அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

Capturevxdgbfcமராட்டியத்தில் உள்ள விரார் நகரில் அரங்கேறிய ஒரு சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சானியா என்ற 11 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை வயிற்று வலியால் அவதியுற்றார்.

அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் அவரது தாய் வீட்டிலேயே வைத்துள்ளார். இதன் காரணமாக அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி விசாரித்ததில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது.

சானியா வயிற்று வலியால் துடித்துக்கொண்டிருக்கையில், அவரது தாய் மீனாட்சி, விபரீதமான பூஜையில் ஈடுபட்டுள்ளார்.

அந்த சிறுமியின் வயிற்றில் ஏறி நின்று நடனமாடியதாக கூறப்படுகிறது. இது குறித்து மீனாட்சியின் சகோதரர் சஞ்சய்க்கு தெரிய வந்தது. விரார் நகருக்கு வந்த சஞ்சய், சானியாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மீனாட்சி வீட்டில் இருந்து வந்த விசித்திரமான சத்தங்களை கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர். மேலும் மீனாட்சியின் உடல் முழுவதும் மஞ்சளாக இருந்ததாகவும் கூறினர்.

201712211531281184_1_blackmagicmumbai._L_styvpf  மகளின் வயிற்று வலியை குணப்படுத்த கொடூர சடங்குகள் செய்த தாய் - பரிதாபமாக பலியான சிறுமி 201712211531281184 1 blackmagicmumbai
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீனாட்சி மற்றும் அவரது உறவினர் மாதுரி ஷிண்டே ஆகிய இருவரை கைது செய்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சானியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சிறுமியின் கால் உட்பட பல பகுதிகளில் காயம் உள்ளது. சிறுமியின் மரணத்திற்கு இந்த காயங்கள் தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சானியாவின் சகோதரனான யாஷ் போலீசாரிடம் கூறுகையில், ‘சானியா வயிற்று வலியால் அவதியுற்றாள். அவளுக்கு குணமாவதற்காக என் தாய் சில சடங்குகள் செய்தார். ஆனால் அவள் இறந்து விட்டாள்.

சடங்குகள் முடியும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என பெற்றோர்கள் என்னை மிரட்டினர். என் தந்தை எந்த சடங்கும் செய்யவில்லை’ என கூறினான்.