அமெரிக்கா, உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

ஜெருசலேம் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு எதிராக ஐ.நாவில் வாக்களித்த நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக வைத்துக்கொள்ளலாம் என அமெரிக்க America_2017_03_17அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்தார். ஆனால், பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெருசலேம் குறித்து ட்ரம்ப் பேசியது, அங்கு கலவரத்தை உருவாக்கியது.

இந்நிலையில், ஐ.நாவில் அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அமெரிக்கா அதை வீட்டோ அதிகாரத்தின் மூலம் நிராகரித்தது.

இதையடுத்து, மீண்டும் அமெரிக்காவிற்கு எதிராக ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் கையெழுத்திட்டன.

இந்நிலையில், ஐ.நாவில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்ட இந்த நாளை அமெரிக்கா என்றும் மறக்காது என ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார்.

மேலும், இஸ்ரேலில் அமெரிக்க தூதரகத்தை அமைப்போம், அதை யாரால் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எங்களிடம் பல்லாயிரக்கணக்கான நிதி வாங்கிக்கொண்டு, எங்களுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளுக்கு, அந்த நிதிகளை உடனடியாக நிறுத்திவிடுவோம்.

அதன் மூலம் எங்களால் நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியும். நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என உலக நாடுகளை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.