தேர்தல் முடிவுகள் ஸ்பெயின் அரசுக்கு மீண்டும் நெருக்கடி!

கேட்டலோனியா மாகாணத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரிவினைவாதிகள் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

1490629882_585273_1490630542_noticia_normal_16345ஸ்பெயினிடம் இருந்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற கேட்டலோனியா தனி நாடாக தன்னை பிரகடனப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்பெயின் அரசு கேட்டலோனியா நாடாளுமன்றத்தை கலைத்தது. அதிபர் கார்லஸ் பூஜ்டிமாண்டையும் பதவியில் இருந்து நீக்கியது.

இதற்கிடையில் நடந்து முடிந்த கேட்டலோனியா நாடாளுமன்றத் தேர்தலில் கேட்டலோனியா தனி நாடு ஆதரவு கட்சிகளான ஒருங்கிணைந்த கேட்டலோனியா, கேட்டலோனியாவின் இடது குடியரசு கட்சி மற்றும் பாப்புலர் யூனிட்டி ஆகியவை இணைந்து மொத்தமுள்ள 130 இடங்களில் 70 இடங்களை வென்று பெரும்பான்மையைப் பெற்றுள்ளன.

இந்த தேர்தல் வெற்றி குறித்து கேட்டலோனியா முன்னாள் அதிபர் கார்லஸ் பூஜ்டிமாண்டை கூறும்போது,

“கேட்டலோனியா குடியரசு வென்றது. ஸ்பெயின் அரசு தோற்கடிக்கப்பட்டது. ஸ்பெயின் பிரதமர் மரியானோ ராஜோய் மற்றும் அவரது கூட்டாளிகளும் தோற்கடிக்கப்பட்டனர்” என்றார்.

இந்தத் தேர்தல் முடிவுகள் ஸ்பெயின் அரசுக்கு மீண்டும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.