பிலிப்பைன்ஸ் படகு கவிழ்ந்து விபத்து! ஐவர் பலி!!!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு அருகில் 257 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் பலியாகியுள்ளனர்.

நேற்று  இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பேரழிவு அதிகாரிகள் மற்றும் கடலோர பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரியல் துறைமுகத்தில் இருந்து போலிலியோ தீவை நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த படகு மணிலாவுக்கு கிழக்கே 70 கிலோமீட்டர் தொலைவில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தை தொடர்ந்து மீனவர்கள் மற்றும் மீட்புப் படகுகள் மூலம் 252 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் டினாஹிக்கன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.குறித்த படகு 286 பேரை கொண்டிருக்கக் கூடிய திறனுடையது என்றும் மோசமான காலநிலை காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

201712220501530930_Four-dead-and-seven-missing-after-ferry-carrying-251-people_SECVPF