நவீன தொழில் நுட்பம் பெருகிவிட்ட இந்த காலத்தில் இளம் தலைமுறையினர் ஐ.டி துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
ஐ.டி துறையில் வேலை செய்யும் பெரும்பாலானோர் தங்கள் பெற்றோருடன் வசிக்கும் சூழல் நிலவுவதில்லை.
பணியின் காரணமாக பல்வேறு நகரங்களில் வசிக்கும் நிலைமை அவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால்., பல இளைஞர்கள் பெற்றோரின் கண்காணிப்பில் இருப்பதில்லை.
வெளி ஊரில் தங்கி வேலை செய்யும் போது ஏற்ப்படும் தகாத சகவாசத்தினால் தங்களது எதிர்காலத்தை இளைஞர்கள் பலர் இழக்கின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்., ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கை நிறைய சம்பளம் வாங்கிய அந்த நபருக்கு ஆரம்பத்தில் போதை பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்கள் அதிகரிக்க ஆரம்பித்தனர்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் அந்த இளைஞர் தங்கி இருந்த அவருக்கு போதை பழக்கத்துடன்., பெண்கள் பழக்கமும் அதிகரித்தது. விலை மாதுக்களிடம் அந்த இளைஞர் தொடர்பு வைத்திருந்தார்.
இந்த நிலையில்., நினைத்த நேரத்தில் விலை மாதுக்கள் கிடைக்காததால்., அந்த இளைஞருக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது.
அதன் படி., வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை என்று செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தார் அந்த இளைஞர்.
விளம்பரத்தை பார்த்து விட்டு, வேலை தேடி 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவர்களின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அந்த பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து அந்த இளைஞர் கற்பழித்துள்ளார். அதனோடு அந்த பெண்ணை அறையில் அடைத்து வைத்து மூன்று நாட்கள் சீரழித்துள்ளனர்.
இந்நிலையில்., அந்த அடுக்குமாடி குடியிருப்பு குப்பை தொட்டியில், அளவுக்கு அதிகமான ஆணுறைகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்மணி ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த குடியிருப்பை சோதனை செய்த போலீசார் மயங்கிய நிலையில் இருந்த அந்த பெண்ணை மீட்டு., அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
சிற்றின்பத்திற்கு ஆசைப்பட்டு அந்த இளைஞர் தனது எதிர்காலத்தை இழந்துள்ளார்.
இளைஞர்களே., சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டோடு இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.