இந்தியா விலுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் கோட்டக்குப்பம் அருகே குடித்து விட்டு இலங்கை அகதிப் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இலங்கை அகதி ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கோட்டக்குப்பம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 26 வயதுடைய அரவிந்தன் என்பவரே இதில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே முகாமில் வசிக்கும் பவித்ரா என்ற இலங்கை அகதிப்பெண் கடைக்கு சென்று வரும்போது அவரை அரவிந்தன் வழிமறித்து குடிபோதையில் பவித்ராவிடம் ஆபாசமாக பேசியுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட பவித்ரா என்ற இலங்கை அகதிப்பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.