நரம்பு மண்டலத்தை பாதிக்கும் மோட்டர் நியூரான் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் பான்புரி நகரத்தை சேர்ந்த 34 வயதான சாம் கைமால் என்ற பெண் தனக்கு பிறகு தனது மகன்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக உயிரிழப்பதற்கு முன் 40,000 பவுண்ஸ்களுக்கு மேல் நிதி திரட்டிவிட்டு உயிரிழந்துள்ளார்.
வாய் பேச முடியாத சாம் நிதி திரட்டும் வலைத்தளம் மூலம் நண்பர்களிடம் நிதி கோரியுள்ளார். அதன்மூலம் 40,000 பவுண்ஸ்களுக்கு மேல் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (21) சாம் உயிரிழந்ததாக அவரது சகோதரி பிப்பா ஹ்யூஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஹ்யூஸ் தெரிவிக்கையில்:- “தனது இரு மகன்களான ஜோயி மற்றும் ஹேரி என்னுடன் அவுஸ்ரேலியாவில் வாழ வேண்டும் என்பதே சாமின் கடைசி ஆசை” எனவும்.
ஒரு வருடத்தினுள் வாழ்க்கையில் பல விடயங்கள் மாறுவது திகைப்பூட்டுகிறது. கடந்த வருடம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிற்கு நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தோம். ஆனால் அது இந்த ஆண்டு முழுமையாக மாறிவிட்டது என தெரிவித்தார்.
அவரது இறப்பால் மன வருத்தம் அடைந்துள்ள சாமின் தோழி சுசானா தெரிவிக்கையில்:- “சாம் உயிரிழந்தது வேதனையை கொடுத்தாலும் அவர் மேலும் துன்பப்படாமல் இறந்தது ஆறுதல் அளிப்பதாக தெரிவித்தார்”.
மேலும் “நான் உயிரிழக்க போவது குறித்து எனக்கு எந்தவிதமான அச்ச உணர்வும் இல்லை ஆனால் எனது மகன்களின் நலன் குறித்து தான் எனக்கு கவலை என சாம் நிதி திரட்டும் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்துள்ளார்.