பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய கடுமையான புயலின் காரணமாக, மண்ணுக்குள் புதைந்த கிராமத்தில் பலியானோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசி வரும் டெம்பின் என்னும் கடுமையான புயலின் காரணமாக தெற்கு பிலிப்பைன்ஸ் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது டூபோட் மற்றும் பியகபோ ஆகிய இரு நகரங்களிலும் ஏற்படுத்திய கடுமையான தாக்கத்தினால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவினால் பச்சை பசேலென காட்சியளித்த ஒரு கிராமமே மூழ்கியுள்ளது.
இதில் கிராமத்தில் மூழ்கியுள்ள மக்களை மீட்க்கும் பணியில் மீட்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அங்குள்ள அதிகாரி கூறுகையில், இதுவரை 90 பேருக்கும் மேற்பட்டோர் கிராமத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. புயலை அடுத்து தொடர்ந்து பெய்த கனமழையே இந்த மண்சரிவிற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புயலால், தெற்கு தீவில், மிந்தானோவில் உள்ள லானோலோ டெல் நோரெ மாகாணத்தில் உள்ள டூபோட், எல் சால்வடோர் மற்றும் முனாய் நகரங்கள் உட்பட பல இடங்களில் இறப்புகள் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.