சிறைக்கைதிகளுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு மன்னிப்பு !

இயேசு பாலகன் பிறப்பான நத்தார் பண்டிகையை முன்னிட்டு சுமார் 500 சிறைக்கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் இது தொடர்பான அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரி.என்.உப்புல்தெனிய கூறியுள்ளார்.

அபராதம் செலுத்த முடியாதவர்கள், 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் மற்றும் தண்டனைகாலம் குறைக்கப்பட்டவர்களுக்கே இந்த பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

prisoner-hands