தமிழ் ஒன்றியத்தின் அனுசரணையில் அரிசிமா தயாரிப்பு நிலையம்!

இலங்கையில் உள்ள மக்கள் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக கட்டப்பட்ட, அரிசிமா தயாரிப்பு நிலையத்திறப்பு விழா நிகழ்வானது நேற்று நடைபெற்றது.

தமிழ் ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் அரிசிமா தயாரிப்பு நிலையம்!

மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில், புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வாழும் மக்களின் அமைப்பான பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் நிதி அனுசரணையிலேயே,  நிகழ்வானது நடைபெற்றது.

இந்நிகழ்வானது நேற்று (22.12.2017) வெள்ளிக்கிழமை பி.ப 3.45 மணிக்கு கல்முனை குவாரி வீதியில் அமைந்துள்ள கட்டத்தில் ஒன்றியத்தின் பணிப்பாளர் ஆர்.தில்லைநாயகம் தலைமையில் நடைபெற்றது.

தமிழ் ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் அரிசிமா தயாரிப்பு நிலையம்!

இவ்விழாவிற்கு பிரதம அதிதிகளாக, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் ஆகியோரும், சிறப்பு அதிதியாக முன்னால் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம் மற்றும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் இருந்து வருகைதந்த பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாகிட், கல்முனை ஸ்ரீமுருகன் தேவஸ்த்தான பிரதம குரு சிவஸ்ரீ சச்சிதானந்தசிவம், மற்றும் ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம பெரியார்கள், இளைஞர்கள், முதியோர் சங்க சமாஜ உறுப்பினர்கள், ஒன்றியத்தின் பணிப்பாளர்கள், ஆலோசகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ் ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் அரிசிமா தயாரிப்பு நிலையம்!

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் அம்பாறை மாவட்டம் என்பது நாளுக்கு நாள் தமிழ் மக்களுடைய நிலையில் பாரிய வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கும் ஒரு மாவட்டமாகும். இங்கு மூன்று இனத்தவர்கள் வாழ்கின்ற போதும், மிகவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் ஒரு இனமாக அம்பாறை மாவட்ட தமிழர்கள் காணப்படுகின்றார்கள். அவ்வாறான இடர்களை களைந்து தாங்களும் இந்த பூமிப்பந்தில் உயிர்வாழ வேண்டுமாக இருந்தால் இங்குள்ள வாழ்வாதாரத்தில் அவதியுறும் மக்களை காப்பாற்ற வேண்டியது தமிழர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உள்ள தலையாய கடமையாகும்.

தமிழ் ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் அரிசிமா தயாரிப்பு நிலையம்!

இதனைக் கருத்தில் கொண்டு, கனேடிய தேசத்தில் தாயகத்தில் இருந்து சென்று புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் அமைப்புக்கள் பல வடகிழக்கில் பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றார்கள். அந்த வகையிலேதான் கனடா நாட்டில் உள்ள பிரம்ரன் தமிழ் ஒன்றியமானது எமது அம்பாறை மக்கள் மேல் கொண்ட அதீத அக்கறை காரணமாக, முதல் முதலாக மக்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் இங்குள்ள அமைப்பான மக்கள் புனர்வாழ் மீள்குடியேற்ற அபிவிருத்தி ஒன்றியம் ஊடாக அரிசிமா தயாரிப்பு நிலையம் ஒன்றினை ஆரம்பித்த வைத்துள்ளமை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.