மத்­திய அர­சாங்கம் வழங்கும் நிதியை பயன்­ப­டுத்­தாத விக்கி?

மத்­திய அர­சாங்கம் வழங்­கு­கின்ற மொத்த நிதியையே உரிய முறையில் பயன்­ப­டுத்­தாது மீதம் வைக்­கின்ற வடக்கு முதல்வர் விக்கினேஸ்­வரன் மலே­ஷியா வழங்­கு­கின்ற உத­வியை வைத்து என்ன செய்வார் என்று புரி­ய­வில்லை என சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்சாளரும் இரா ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

சிறந்த நீதி­ய­ர­ச­ரான வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் அர­சி­யல்­வா­தி­யாக தோல்வி அடைந்­தி­ருக்­கின்றார் என்­ப­தையே நான் கூறுகின்றேன் என்றும் டிலான் பெரேரா குறிப்­பிட்டார்.

CV-Wigneshwaranஇது தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் மேலும் குறிப்­பி­டு­கையில்

இலங்கை வந்­தி­ருந்த மலே­ஷியப் பிர­த­மரை வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். இதன்போது வடக்கை கட்­டி­யெ­ழுப்ப உதவி வழங்­கு­வ­தாக மலே­ஷியப் பிர­தமர் கூறி­யி­ருந்தார்.

இங்கு முக்­கி­ய­மான விடயம் என்­ன­வெனில் வடக்கு முத­ல­மைச்சர் மத்­திய அர­சாங்­கத்­தினால் அனுப்­பப்­ப­டு­கின்ற அனைத்து நிதி­யையும் பயன்­ப­டுத்­தாமல் அதிலும் மீதம் வைத்­துக்­கொண்­டி­ருக்­கின்றார்.

இவ்­வாறு வடக்கு மாகா­ண­ச­பைக்­காக அனுப்­பப்­படும் நிதி­யையே முழு­மை­யாக பயன்­ப­டுத்­தாமல் மீதம் வைத்­துக்­கொண்­டி­ருக்கும் வடக்கு முதல்வர் எவ்­வாறு மலே­ஷி­யாவின் உத­வியைப் பெற்று வடக்கை கட்­டி­யெ­ழுப்­புவார் எனத் தெரி­ய­வில்லை.

அதா­வது வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் ஒரு சிறந்த நீதி­ய­ர­ச­ராக இருந்­தவர் ஆனால் அவர் ஒரு அர­சி­யல்­வா­தி­யாக தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கின்றார்.

மலேஷியப் பிரதமரின் ஆலோசனையைக் கேட்டாவது அவர் எதிர்வரும் காலங்களில் உரிய முறையில் செயற்பட்டு வடக்கை கட்டியெழுப்புவார் என எதிர்பார்க்கின்றோம்.

மலேசியப் பிரதமரைச் சந்தித்தார் வடக்கு முதல்வர் – இணைந்து செயற்பட இணக்கம்

najib-razak-cm  மத்­திய அர­சாங்கம் வழங்கும் நிதியை பயன்­ப­டுத்­தாத விக்கி மலே­ஷி­யாவின் நிதியை வைத்து என்ன செய்வார்? najib razak cm

மலேசியப் பிரதமர் மொகமட் நஜீப் ரசாக் Dec 19, 2017 அன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில்  இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ள மலேசியப் பிரதமர் அப்துல் ரசாக்,

“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

மாகாணத்தின் மீள் அபிவிருத்திக்கும் அங்குள்ள தமிழ்ச் சமூகத்தை உயர்த்துவதற்கும், ஆதரவளிப்பதில், இணைந்து செயற்படுவதற்கு நாம் இணங்கியுள்ளோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.