அழகிகளை விமர்சித்த உயர் அதிகாரிகள்!! மூன்று உயர் அதிகாரிகள் பதவிவிலகல்!

அமெரிக்காவில் நடைபெறும் மிஸ் அமெரிக்கா எனும் அமெரிக்க அழகிப் போட்டியை நடத்தும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட, மூன்று உயர் அதிகாரிகள் நேற்று பதவி விலகியுள்ளனர்.

அழகிகளை விமர்சித்த மூன்று உயர் அதிகாரிகள் பதவிவிலகல்!

அழகிப் போட்டியில் இதுவரை வெற்றிபெற்றோர் குறித்த அவதூறான கருத்துக்கள் கொண்ட மின்னஞ்சல்களை இவர்கள் அனுப்பியதாக, கடந்த வாரம் அறிக்கை வெளியானது.

இதில், அழகிகள் குறித்த தரக்குறைவான கருத்துக்களை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் எழுதியிருப்பதாக ஹஃபிங்டன் போஸ்ட் (Huffington Post) அறிக்கை குறிப்பிட்டது. இதனையடுத்து, அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் நேற்று சனிக்கிழமை(23.12.2017) வெற்றி பெற்ற முன்னாள் அழகி மல்லோரி ஹாகனிடம் மன்னிப்பும் கோரியிருந்தார்.

இந்நிலையில், மிஸ் அமெரிக்கா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மூவர் அழகிகளின் அறிவாற்றல் மற்றம் பாலியல் வாழ்கை அடிப்படையாக கொண்ட துஷ்பிரயோக மின்னஞ்சல் அனுப்பிய விவகாரத்தில், நேற்று பதவிவிலகியுள்ளனர்.அமெரிக்க அழகிப் போட்டியை ஏற்று நடத்தும் நிறுவனம், பெண்களைத் தரக்குறைவாகச் சித்திரிப்பதாய் ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்துது.

மின்னஞ்சல் குறித்த புதிய சர்ச்சையானது, அழகிப் போட்டி நடத்தப்படும் விதம், அதன் செயல்முறை ஆகியவை குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.