மட்டக்களப்பு – காத்தான்குடி, தாழங்குடா பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.கொக்கட்டிச்சோலை முனைக்காடு பகுதியிலிருந்து நேற்றிரவு வீடு திரும்பிய 61 வயதுடைய செ.தவமணி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் ஒருவர் விசாரணைக்காக காத்தான்குடி பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.