முல்லைத்தீவு மாவட்டத்தில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் அவை விவசாயிகளின் நெற்பயிர்கள் மற்றும் வாழ்வாதார பயிர்ச்செய்கைகளை அழித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கூட்டம் கூட்டமாக வரும் யானைகளை விரட்டுவதற்கு தீப்பிழம்பு எழுப்பி வயல்களை பாதுகாக்க விவசாயிகள் முயற்சித்துள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்று இரவு வயல் காவலுக்கு சென்ற விவசாயி ஒருவர் பெரிய பாம்பு ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.