கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது இன்று நடைபெற்றுவருகிறது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் தளத்தில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி, இறுதியாக 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் தினகரனே முன்னிலையில் நிற்கிறார். அதன் காரணத்தினால், அதிமுகவினரும் திமுகவினரும் சற்றே அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர் என்றால் அதில் மிகையில்லை.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முடிகள் நிச்சயம் அரசியல் தளத்தில் பாரிய அதிர்வுகளை உண்டாக்கும் என்பதால் தமிழக மக்களிடையே பலத்த எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது என்றால் மிகையேதுமில்லை.