யுனிசெஃப் அமைப்பின் புதிய செயல் இயக்குநராக பெண்!

அமெரிக்க முன்னாள் அரசு அதிகாரியான ஹென்ரீட்டா ஹெச் போரோவை யுனிசெஃப் அமைப்பின் செயல் இயக்குநராக ஐ.நா பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ் நியமித்துள்ளார்.

5a3f5a79e3b61-IBCTAMIL69 வயதாகும் இவர் பின்தங்கிய நாடுகளுக்கான பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், பேரிடர் நிவாரணம், மனிதநேயப் பணிகள் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் உடையவர் ஆவார்.

மேலும் இவர் அமெரிக்க வெளியுறவுத் துறையின் சர்வதேச மேம்பாட்டு பிரிவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளுக்கு உதவிகள் அளிப்பதற்கான அமெரிக்க வெளியுறவுத் துறை பிரிவு இயக்குநராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார். கடந்த 2006 தொடக்கம் 2009 வரையில் இந்த கௌரவம் மிக்க பதவிகளை அவர் வகித்துள்ளார்.

அத்துடன் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமை செயலதிகாரியாக பொறுப்பு வகித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுனிசெஃப் அமைப்பின் புதிய செயல் இயக்குநராக பெண் நியமனம்!