யாழ் மாவட்டத்தில் முஸ்லிம்கள் உள்ளார்களா..?

rishad12.jpg2_2கடந்த ஆண்டு மன்னார் மாவட்டத்தில் நடாத்தப்படவிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த மீலாத் நபி நிகழ்வினை யாழ் மாவட்டத்திற்கு தாருங்கள் என தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டவர் யாழ் முஸ்லீம் இணையத்தை நடாத்தும் சகோதரர் அன்சீர் அவர்கள். உடனே நான் இன்சா அல்லாஹ் செய்வோம் என கூறினேன். இது தவிர யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் உள்ளார்களா என்ற ஐயப்பாடு அண்மைக்காலமாக எழுந்த நிலையிலும் இந்த நிகழ்வை இந்த மண்ணில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம் எச் எம் ஹலீமின் ஆதரவுடன் இன்று நிறைவேற்றியுள்ளோம் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்

2017 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நேற்று 23.12.2017 நடைபெற்ற போது நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மேலும் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு 450 வீடுகளை அமைத்துக்கொடுக்க அடுத்தாண்டு நிதி ஒதுக்கவுள்ளது. அதற்கு அரச அதிகாரிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

யாழ்ப்பணத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்காக மீலாத் கிராமம் என்ற பெயரில் நான் நடப்பாண்டில் 160 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கி இருந்தேன். அந்த நிதி ஊடாக யாழ்ப்பாணப் பகுதியில் 200 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் வெறுமனே 36 வீடுகள் மட்டுமே கட்ட அனுமதிக்கப்பட்டு வேலைகள் இடம்பெற்று வருகின்றது. இதற்கு பல இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றது.

அதனால் அந்த நிதி மீண்டும் திறைசேரிக்கு திரும்ப செல்லவுள்ளது. பரச்ச வெளிப் பகுதியில் 20 ஏக்கர் காணியை முஸ்லிம் மக்களுக்காக வீடுகள் அமைக்க காணியை தருமாறு கேட்டிருந்தோம். அதில் 300 வீடுகளை அமைக்க முடியும். ஆனால் அதற்குத் தடைகள் வந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம் மக்களுக்காக வீடுகளை கட்ட ஆதரவைக் கொடுங்கள்.

நான் அடுத்த ஆண்டும் 450 வீடுகளை அமைக்க நிதி ஒதுக்க திட்டமிட்டுள்ளேன்’ என்றார்.

முக்கிய குறிப்பு,

தேசிய மீலாத் விழாவை நடத்த யாழ்ப்பாணம் இவ்வருடம் (2017) தெரிவு செய்யப்பட்ட பின்னர், அமைச்சர் ஹலீம் மற்றும். அதிகாரிகள் ஜனாதிபதியை சந்தித்து, யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத் விழாவை நடாத்த உள்ளோம். இதில் நீங்கள் பிரதம அதீதியாக பங்குகொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது குறிக்கிட்டுள்ள ஜனாதிபதி, யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் உள்ளார்களா? உங்களுக்கு மீலாத் விழாவை நடாத்த வேறு இடம் கிடைக்கவில்லையா என கேட்டுள்ளார்.

இதன்போது பதிலளித்துள்ள அமைச்சர் ஹலீம், யாழ்ப்பாண முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக அங்கு வாழ்கின்றனர். அவர்கள் 1990 இல் புலிகளினால் இனச்சுத்திகரிப்புச் செய்யபட்டவர்கள். தற்போது படிப்படியாக மீள்குடியேறி வருகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழ்கின்றனரா என்ற ஐயப்பாட்டுடன் ஜனாதிபதி எழுப்பிய கேள்விக்கே, அமைச்சர் றிசாத் தேசிய மீலாத் விழா மேடையில், இதன்போது மறைமுக தாக்குதலை மேற்கொண்டு பதிலடி கொடுத்துள்ளார்.

யாழப்பாணம் நல்லூர் கோயில், யாழ்ப்பாண மாதா தேவாலயம் உளளிட்டவைகள் 1000 க்கும் அதிகமானவர்கள் அல்லாஹ்வை வழிபடும் ஜும்ஆ பள்ளிவாசல்களாக இருந்தமையும், பின்னர் அவை ஒல்லாந்தர் மற்றும் தமிழ் மன்னர்களின் காலத்தில் தகர்க்கப்பட்டு கோயிலும், ஆலயமும் கட்டப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.