நாடு திரும்பும் கனேடிய நிறுவனங்கள்!

NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இன்னமும் இழூபறி நிலை காணப்படுவதால் ஆறு சதவீதமான கனேடிய நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளின் ஒரு பகுதியை அமெரிக்கா நோக்கி நகர்த்த திட்டமிட்டுள்ளதாக கனேடிய ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

cadகுறித்த நிறுவனங்களினால் கடந்த 16ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள அரை ஆண்டு அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகங்களை தனிமைப்படுத்தும் போக்கினால், இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 1,002 நிறுவனங்களில், 23 சதவீதமான நிறுவனங்கள், இந்த தடையற்ற வர்த்தக உடன்படிக்கையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக, பலத்த பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக கனேடிய ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே அமெரிக்காவை மட்டும் நம்பி உற்பத்திகளை மேற்கொண்டுவரும் கனேடிய நிறுவனங்கள், தமது செயற்பாடுகளின் ஒரு பகுதியினை அமெரிக்கா நோக்கி, அமெரிக்காவின் எல்லையினுள் நகர்த்தி வருவதாக அல்லது நகர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கனடாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் சுமார் 75 சதவீத பொருட்கள் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், தடையற்ற வர்த்தக உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா வெளியேறுமாக இருந்தால், கனடாவின் ஏற்றுமதித் துறை பாரிய பாதிப்பினை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.